Tamil Health Information Fact Sheets
ENGLISH TRANSLATION OF THIS PAGE
தமிழ்
சுகாதாரத் தகவல் உண்மைத்
தாள்களுக்கான அறிமுகம்
உங்கள் மருத்துவர், மருத்துவச்சி அல்லது செவிலியருடனான உங்கள் உரையாடலில்
உதவிபுரிய, வெஸ்ட்மெட் மருத்துவமனையில் மிகப்
பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மொழிகளில் சுகாதாரத் தகவல் உண்மைத் தாள்கள் (health information fact
sheets) எங்களிடம் உள்ளன. இந்த உண்மைத் தாள்கள் முறையாக மொழிபெயர்க்கப்பட்டு, அவை உங்கள் மொழியில் அர்த்தமுள்ளதாக இருப்பதை உறுதிசெய்ய
மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிட்னி உள்ளூர் சுகாதார மாவட்ட (WSLHD) மக்களுக்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, எங்களுடன் உங்கள் சுகாதாரப் பராமரிப்புக்கு உதவிடும்
வகையில், மொழிபெயர்க்கப்பட்ட
சுகாதாரத் தகவல் உண்மைத் தாள்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்.
நீங்கள் மருத்துவமனைக்கு
வரும்போது, மருத்துவமனை நடைமுறைகள் மற்றும்
பராமரிப்பில் உங்களுக்கு உதவ, சுகாதாரத் தகவல்களை
மொழிபெயர்த்துள்ளோம். சேர்க்கையின் போது, உங்கள் தேவைகள்
தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட சுகாதாரத் தகவல்களை உங்களுக்கு வழங்குமாறு அலுவலர்களிடம்
கேளுங்கள். உங்களுக்குத் தேவையான தகவல்கள் எங்களிடம் இல்லையென்றால் உங்களுக்குப் பல்வேறு
சுகாதார விஷயங்களில் மொழிபெயர்க்கப்பட்ட சுகாதாரத் தகவல்களை, நியூ சவுத்
வேல்ஸ் சுகாதாரத்துறை வழங்குகிறது. இந்த ஆதாரவளங்களைக் காண N.S.W. Health Multicultural Resources -ஐப் பார்க்கவும்.
தமிழில் கூடுதல் தகவல்களைக் கண்டறிய, கீழே உள்ள படங்களைச் சொடுக்கவும்
ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறந்திருக்கிறதா?
இந்த ஒலிக்கோப்பு (audio file) பிரசவம் பற்றிய தகவல்களை வழங்குகிறது. ஆஸ்திரேலியப் பிறப்பு நடைமுறைகள், செயல்முறைகள் மற்றும் பராமரிப்புத் தெரிவுகள் பற்றி நீங்கள் தமிழ் மொழியில் அறிந்து கொள்வீர்கள்.
அறிமுகம் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளது என்பதைத் தயவுசெய்து குறித்துக் கொள்ளவும்.
இந்த ஒலிவழித் தகவல்கள் வழிகாட்டுதலுக்காக மட்டுமே, ஆனால் அவை உங்கள் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரின் ஆலோசனை மற்றும் அறிவுரைக்கு மாற்றாக அமையாது.